news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews மாமரங்களை வெட்டி அகற்றி மாந்தோப்புகள் அழிப்பு
tv

Also Watch

tv

Read this

மாமரங்களை வெட்டி அகற்றி மாந்தோப்புகள் அழிப்பு

கிருஷ்ணகிரி

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
சரிந்து வரும் மாங்காய் விலை

மாந்தோப்புகள் அழிப்பு : 

தமிழகத்தில் மா பழத்திற்கு பெயர் போன மாவட்டம் கிருஷ்ணகிரி மாவட்டம். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் சுமார் 43000 ஹக்டர் பரப்பளவில் மா சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் அதிகளவில் பெங்களூரா, சேந்துரா, நீலம், பங்கனப்பள்ளி, பீத்தர், மல்லிகா, இம்மாம் பஸ்த் போன்ற பலவகையான மா வகைகள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

இந்த மா வகைகள் தமிழகத்திற்கு அனைத்து மாவட்டங்களுக்கும், கர்நாடக, ஆந்திரா, தெலுங்கனா, மகாரஸ்டிரா, பீகார், டெல்லி, அச்சாம் ராஜஸ்தான், உத்திரபிரதேஷ் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுமார் 5000 டன் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. மேலும் மாவட்டத்தில் உள்ள மாங்கூழ் தொழிற்சாலைகளுக்கும் அனுப்பப்பட்டு மாங்கூழ்கள் தாயரிக்கப்பட்டு பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ப்பட்டு வருகிறது.

இந்த மா வகைகளை பெருமை படுத்தும் விதமாக கடந்த 28 ஆண்டுகளாக கிருஷ்ணகிரியில் மா கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த கண்காட்சியில் நாட்டில் உள்ள அனைத்து வகையாக மா
வகைகளும் மக்களின் பார்வைக்கு வைக்கப்படுவது மாங்காய் பெருமையை பறைசாற்றி வருகிறது.

இந்த நிலையில் கடந்த 2020 கொரொனா ஊரடங்கிற்கு பிறகு மாவட்டத்தில் மா விவசாயம் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 2019 வரை மாவட்டத்தில் மா டன்னிற்கு 15 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை மாங்கூழ் தொழிற்சாலைக்கு மாங்காய்களை விவசாயிகள் கொடுத்து வந்தனர்.

மா விவசாயிகளிடம், வியாபாரிகளிடமும் குறைந்த பட்சம் 15 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை மா வகைகள் கொள்முதல் செய்யப்பட்டு மாங்கூழ் தொழிற்சாலைக்கும் விற்பனைக்கு அனுப்பட்டது.

ஆனால் 2021 முதல் மாவட்டத்தில் மா விலை தலைகீழாக மாறியது. கடந்த 5 ஆண்டுகளாக மாவட்டத்தில் மா விலை தொடந்து சரிந்து வருவதால் மா விவசாயிகள் கடும் வேதனை
அடைந்துள்ளனர்.

2022 முதல் மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படும் மாங்காய்களை மாங்கூழ் தொழிற்சாலைகள் கிலோ 2 ரூபாய் முதல் 5 ரூபாய் வரை மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் பல டன் மாங்காய்கள் கொள்முதல் செய்யபடமால் மா மரங்களில் அறுவடை செய்யமால் விவசாயிகள் விட்டனர்.

இதனால் ஆண்டு தோறும் மா சாகுபடி அதிகரித்துள்ளதாலும், மாங்காய்கற்கு உரிய விலை கிடைக்கமால் விவாசயிகள் பெரும் நஷ்த்தை சந்தித்து வந்தனர். இதையடுத்து மாவட்டத்தில் உள்ள மா விவசாயிகள், மா விவசாய சங்கங்கள் இணைந்து பல்வேறு கோரிக்கைகளை அரசுக்கு வைத்ததை தொடந்து கடந்த 2024 ஆம் ஆண்டு மா விவசாயிகள் முத்தரப்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாங்கூழ் தொழிற்சாலை உரிமையாளர்கள், மா விவசாயிகள் இணைந்து மாவிற்கு முத்தரப்பு கூட்டம் முதன் முதலாக நடைபெற்றது. இதில் மா விவசாயிகள் மாங்கூழ் தொழிற்சாலை உரிமையாளர்களிடம் மாங்காய்களை உரிய விலைக்கு எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இது போன்று கடந்த 3 ஆண்டுகளாக மா முத்தரப்பு கூட்டம் நடைபெற்று வந்தபோதும் மா விவசாயிகளின் கோரிக்கைகளை மாங்கூழ் உற்பத்தி உரிமையாளர்கள் ஏற்கவில்லை. மறாக மாங்கூழ்
உற்பதி உரிமையாளர்கள் சங்கம் கூறுகையில் 2020ஆண்டுக்கும் பிறகு பல்வேறு நாடுகளுக்கு மாங்கூழ் ஏற்றுமதி நிறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக அரபு நாடுகள், ஆஸ்திரெலியா, ஐரோப்பா, ஈரான் போன்ற நாடுகளுக்கு மாங்கூழ் ஏற்றுமதி நிறுத்தப்பட்டுள்ளதால் மாங்காய்களை கொள்முதல் செய்யமுடியவில்லை என மாங்கூழ்
உற்பதியாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இதனால் கடந்த ஆண்டு மாவிற்கு உரிய விலை இல்லததால் மாவட்டத்தில் பெரும் போராட்டங்கள் நடைபெற்றது. பல்வேறு கட்சிகள், மா விவசாய சங்கங்கள் சாலைகளில் மாங்களை கொட்டியும் உண்ணாவிரத போராட்டங்களை நடத்தினர்.

ஆனால் மாவிற்கு கடந்த 2 ஆண்டுகளாக உரிய விலை இல்லாமால் மா விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். இதனால் மாவட்டத்தில் மா விவசாயிகள் சுமார் 10 ஆயிரம் ஹக்டர் மா தோட்டங்களை வெட்டி மாற்றும் விவசாயத்திற்கு சென்றுள்ளனர்.

இது குறித்து மா விவசாயிகள் கூறுகையில் மாவட்டத்தில் ஆண்டு தோறும் மா சாகுபடி அமோகமாக இருந்தாலும் மாவட்டத்தில் உள்ள 72 மாங்கூழ் தொழிற்சாலைகள் உள்ளது. அதில் 4 மாங்கூழ் தொழிற்சாலை மட்டுமே செயல்பட்டு வருகிறது.

இதனால் மாங்கூழ் தொழிற்சாலை உரிமையாளர்கள் உற்பத்தி பாதிப்பு மற்றும் ஏற்றுமதி குறைவு காரணத்தை காட்டி உரிய விலையை கொடுக்க மறுக்கிறனர். இதனால் மா விவசாயிகள் மாங்காய்களை விற்கமுடியமால் சாலைகளில் கொட்டி வருவதாக தெரிவிக்கின்றனர்.

மேலும் கடந்த 4 ஆண்டுகளாக மாவிற்கு உரிய இல்லததால் அண்டை மாநிலங்களான ஆந்திரா கர்நாடக மாநில விவசாயிகளுக்கு அரசு வழங்குவது போல மானியம் மற்றும் ஆதார விலை
வழங்கவேண்டும் என கோரிக்கை வைத்து வருகினறனர்.

ஆனால் இதுவரை அரசு அதைபற்றி ஆலோசனை கூட செய்யததால் மா விவசாயிகள் மா மரங்களை வெட்டி மாற்று விவசாயத்திற்கு மாறி வருகிறனர். கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் சுமார் 10 ஆயிரம் ஹக்டர் பரப்பளவில் மா தோட்டங்கள் அழிக்கப்பட்டு உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து விவாசயிகள் கூறுகையில் ஆண்டு தோறும் மா விவசாயிகளுக்கு மா ஆதார விலை இல்லதமால் பெரும் நஷ்டத்தையும் வேதனையும் சந்தித்து வருகின்றனர். இதனால்
மா விவசாயிகள் மா சாகுபடியை கைவிட்டு மாற்று விவசாயத்திற்கு மாறி வருகின்றனர்.

இன்னும் சில ஆண்டுகளில் மாவட்டத்தில் மா வகைகள் அனைத்தும் அழிக்கப்படும் நிலை ஏற்படுள்ளது. மா முத்தரப்பு கூட்டத்திலும் மா விவசாயிகளின் கோரிக்கையை
மாங்கூழ் உற்பத்தியாளர்கள் ஏற்கமறுப்பதால் அரசு உரிய ஆதார விலையை கொடுக்கவில்லை.

இதனால் ஆண்டுக்கு ஆண்டு மா உற்பத்தி குறைந்து வருகிறது. இன்னும் 5 ஆண்டுகளில் மா விவசாயம் முழுவதும் அழியும் நிலை ஏற்படுத்துள்ளது. இந்தாண்டு நடந்த மா முத்தரப்பு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமாரும் மா விவசாயிகளுக்கு உரிய விலை வழங்க வேண்டும் என ஆதரவாக மாங்கூழ் உற்பத்தியாளருக்கு கோரிக்கை வைத்தார்.

கடந்த 3 ஆண்டுகளாக நடத்தப்படும் மா முத்தரப்பு கூட்டத்திலும் பேச்சு வார்த்தை முடிவு எட்டபடுவதில்லை. எனவே இந்தமுறை வந்துள்ள அரசு மா விவசாயிகளின் வாழ்வாதரத்தை காக்க மா விவசாயத்திற்கு குழு அமைத்து ஆண்டு தோறும் விலை நிர்ணயம் மற்றும் ஆதார விலை வழங்க வேண்டும் என மாவட்ட மா விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Link
கோயில்  திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு போட்டி

கோயில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு போட்டி

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

4000 டாஸ்மாக் கடைகள் மூடப்படுமா?

0
2 hrs 22 mins agoshare
Minister vignesh








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved