சென்னை திருவொற்றியூரில் திமுக ஆதரவாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. பலகை தொட்டிக்குப்பம் அருகே தேசப்பன் என்பவரது வீட்டில், அதிகாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் பெட்ரோல் குண்டை வீசிச் சென்ற நிலையில், வீட்டின் கதவு அருகே பற்றி எரிந்த தீயை அருகிலிருந்தவர்கள் தண்ணீரை ஊற்றி அணைத்தனர். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பூங்காவில் மதுபோதையில் தகராறு செய்த இளைஞர்களை தேசப்பனின் மகன் தட்டிக் கேட்டதாகவும், அதனால் ஆத்திரமடைந்த அவர்கள் தேசப்பனின் வீட்டில் பெட்ரோல் குண்டை வீசியதாகவும் கூறப்படுகிறது.