மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அடுத்த பி.செட்டியபட்டியில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் முறையான பாதுகாப்பின்றி இருந்த 24 குழந்தைகளை அதிகாரிகள் மீட்டு அரசு அனுமதி பெற்ற காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். கடந்த சில ஆண்டுகளாக முறையான பாதுகாப்பு, உணவு, பராமரிப்பு வசதிகள் இல்லை என புகார் எழுந்த நிலையில், குழந்தைகள் நல அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.