திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு. வெளிநாட்டவர்கள் இந்தியாவிற்கு வந்து பல்வேரு குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ரஷ்யா நாட்டை சேர்ந்த ஒருவர், நைஜீரியாவை சேர்ந்த மூன்று பேர், செர்பியாவை சேர்ந்த ஒருவர் மற்றும் நேபாலை சேர்ந்த இரண்டுபேர் என மொத்தம் 7 பேர் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தவர்கள் அங்கிருந்து இடமாற்றம் செய்யப்பட்டு செய்யாறு வட்டாட்சியர் அலுவலகம் வளாகத்தில் உள்ள வருவாய் துறையின் சிறப்பு முகாமிற்கு இரவு அழைத்துவரப்பட்டுள்ளனர். வட்டாட்சியர் வளாகத்தில் வருவாய்த் துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த முகாம் கடந்த 2014 முதல் 2016 வரை இரண்டு ஆண்டுகள் வெளிநாட்டு அகதிகள் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அதன்பின் அது செயல்பாட்டில் இல்லாமல் இருந்த நிலையில் மீண்டும் தற்போது தமிழ் நாடு காவலர் வீட்டு வசதி வாரியம் மூலம் ரூ.1 கோடி மதிப்பீட்டில் நவீன பாதுகாப்பு வசதிகளுடன் புனரமைக்கப்பட்டு மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தலைமையில் செய்யாறு வட்டாட்சியர் மேற்பார்வையில் வருவாய் துறை சிறப்பு முகாம் நடைபெறும் என தெரிவிக்கப்படுள்ளது. வடக்கு மண்டலத்தை சேர்ந்த 10 மாவட்டங்களில் இருந்து காவல் ஆய்வாளர், உதவி காவல் ஆய்வாளர்கள் தலைமையில் தமிழ்நாடு சிறப்பு படை மற்றும் ஆயுதப்படை காவலர்கள் 24 மணி நேரம் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். திருச்சியிலிருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் காவல் வாகனத்தில் வந்திறங்கிய வெளிநாட்டினர் இதை பார்ப்பதற்கு சிறப்பு முகாம் போல இல்லை ஜெயில் போல் உள்ளது எனவும், போதுமான வசதிகள் இருக்கா , மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பீர்களா எனவும் என்மீது உள்ள வழக்கு விசாரணை முடிந்துவிட்ட பிறகும் என்னை எதற்காக இப்படி தங்க வைக்கிறீர்கள் என கேட்டும் வாக்குவாதம் செய்தனர். திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர், ஏடிஎஸ்பி சீவனுபாண்டியன் தலைமையில் போலீசார் திருச்சி போலீசாரிடம் இருந்து 7 பேரை பெற்று அவர்களை சமாதானம் செய்து அவர்களின் உடமைகளுன் முகாமிற்குள் அழைத்துச் சென்றனர்.இதையும் படியுங்கள் : பொங்கல் பண்டிகை முன்னிட்டு கார்னிவல்