சென்னை திருவான்மியூர் சிக்னலில் போடப்பட்டிருந்த பசுமை பந்தல் கிழிந்து தொங்குவதால் வாகன ஓட்டிகள் கடும் பதற்றத்துடனே செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கோடை வெயிலில் இருந்து சிக்னலுக்காக காத்திருக்கும் வாகன ஓட்டிகளை காக்கும் வகையில் அமைக்கப்பட்ட பசுமை பந்தல், சரியான முறையில் அமைக்கப்படாததால் ஆபத்தை விளைவிக்கும் வகையில் பறந்துகொண்டிருக்கிறது.