செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே பாக்கம் ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டப் பணி வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு ஆண்டில் 20 நாட்கள் மட்டுமே வேலை வழங்கியுள்ளதாகவும், தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு மேலாக தங்களுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்கவில்லை எனவும் புகார் தெரிவித்தனர்.