கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையின் காரணமாக, திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே ஆறு கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிப்பதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். கொக்கலாடியிலிருந்து மணக்குடி வரை செல்லக்குடிய சாலை முற்றிலுமாக சேதம் அடைந்துள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சாலையில் செல்ல முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.