நியூஸ் தமிழ் செய்தி எதிரொலியாக, தேனி மாவட்டம் கொட்டகுடி மலை கிராமத்திற்கு தேசிய ஊரக சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 220 மீட்டர் தொலைவிற்கு புதிய சாலை அமைப்பதற்கான பூமி பூஜை போடப்பட்டது. கொட்டகுடி மலை கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் நிலையில், சாலை வசதி மற்றும் தொலை தொடர்பு வசதியில்லாமல் மக்கள் அவதிக்குள்ளாகி வந்தனர். சுமார் 220 மீட்டர் தூரம் வனத்துறை கட்டுப்பாட்டில் இருந்ததால் சாலை அமைக்கும் பணி தாமதமாவதாக கடந்த மாதம் 25 ஆம் தேதி நியூஸ் தமிழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக தற்போது வனத்துறை அனுமதியுடன் 22 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணி தொடங்கி மலை கிராம மக்களின் 50 ஆண்டுகால கோரிக்கை நிறைவேறியுள்ளது.