ராமநாதபுரம் நகரில் உள்ள சாலைகள் அனைத்தும் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு மிகவும் மோசமாக உள்ளதென பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். பாதாள சாக்கடைக்காக தோண்டப்படும் பள்ளங்களை மூடிய பிறகு, முறையாக சாலையை அமைப்பதில்லை என்று, மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். அரண்மனை வண்டிக்கார தெரு, கேணிக்கரை, இந்திரா நகர் உள்பட நகரின் பல பகுதிகளிலும் குண்டும் குழியுமாக உள்ள சாலையால், வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். அலட்சியமாக உள்ள நகராட்சி நிர்வாகம் இனியாவது உரிய நடவடிக்கை எடுத்து சாலைகளை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது. இதையும் பாருங்கள் - கஞ்சா போதையில் மாணவனை அரிவாளால் வெட்டிய நண்பன்