சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே நகை கடையின் சுவற்றை துளையிட்டு 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. தளவாய்பட்டி பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவர் தீவட்டிப்பட்டி பகுதியில் APR ஜுவல்லரி என்ற பெயரில் சிறிய நகை அடமான கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில், வழக்கம் போல் கடையை திறந்து பார்த்த போது பின்பக்க சுவர் துளையிட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதுடன், CCTV கேமராவும் உடைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கடையின் உரிமையாளர் கார்த்திக், தீவட்டிப்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.