விழுப்புரத்தில், மேட்ரிமோனி மூலம் ஆசிரியை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றிய ரோமியோ. ஏற்கனவே 2 மனைவிகள், 3 பிள்ளைகள் உள்ள நிலையில், இளம்பெண்களை கல்யாண வலையில் விரித்து ஐபோன், பைக் மற்றும் லட்சங்களை சுருட்டிய டிரைவர். ரோமியோவின் திருட்டுவேலை வெளிச்சத்திற்கு வந்தது எப்படி? கல்யாணராமன் சிக்கினாரா? பின்னணி என்ன?விழுப்புரத்தை சேர்ந்த 28 வயசான ஒரு இளம்பெண், திண்டிவனம் எஸ்.பி. அலுவலகத்துக்கு வந்து ஒரு கம்ப்ளைண்ட் குடுத்துருக்காங்க. சென்னை, பூந்தமல்லியை சேர்ந்த அருள்மொழிங்குற நபர், மேட்ரிமோனி மூலமா பேசி, தன்னை திருமணம் பண்ணிக்கிறதா சொன்னதாகவும், ஒரு ஸ்கூட்டி, ஐபோன், ஜிபே மூலமா 12 லட்சம் ரூபாய் வாங்கினதாகவும் சொன்ன அந்த பொண்ணு கடைசியில, அருள்மொழி தன்னை ஏமாத்திட்டதாவும் சொல்லிருக்காங்க. மேலும், அருள்மொழியோட செல்போன் எண்ணும் ஸ்விட்ச் ஆப்ல இருக்குறதா சொல்லிருக்காங்க அந்த இளம்பெண்.அடுத்து, அந்த பெண்கிட்ட இருந்து செல்போன் நம்பரை வாங்கி சைபர் கிரைம் போலீஸ் உதவியோட விசாரணையில இறங்கிருக்காங்க. அதுல, அருள்மொழி இருக்குற இடத்த கண்டுபிடிச்ச போலீசார், அவரை கைது பண்ணி மயிலம் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைச்சிட்டு வந்து விசாரிச்சிருக்காங்க. அப்பதான், அருள்மொழி, கல்யாணராமன் அப்டிங்குற விவரமே தெரியவந்துருக்கு.ரெண்டு மனைவிகள், 3 பிள்ளைகள்ன்னு டபுள் குடும்பத்தோட இருந்த அருள்மொழி, திருமண வரன் தேடுற பெண்களை மேட்ரிமோனி மூலமா குறிவச்சி பேச ஆரம்பிச்சிருக்காரு.டிரைவரா வேலை பாத்த அருள்மொழி, தான் என்ஜினியரிங் படிச்சிட்டு ஒரு கம்பெனி வச்சி நடத்திட்டு வர்றதா, பொய் சொல்லிதான் பெண்களுக்கு வலை விரிச்சிருக்காரு. முழு பூசணிக்காயை சோத்துல மறைக்கிற மாதிரி, டபுள் குடும்ப விவகாரத்த மூடி மறைச்சி, 20க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாத்துன அருள்மொழி, அந்த பெண்கள்கிட்ட இருந்து கறக்குறவரை பணத்த கறந்துட்டு அடுத்து செல்போனை ஸ்விட்ச் ஆப் பண்ணிட்டு எஸ்கேப் ஆகிடுவாரு.ஏமாந்த பெண்கள் என்ன பண்றது? அவர எப்படி கண்டுபுடிக்கிறதுனு தெரியாம அமைதியா இருந்துருக்காங்க. இதுக்கு மத்தியில தான் விழுப்புரத்தை சேர்ந்த பொண்ணுக்கிட்டயும் தன்னோட வேலையை காட்டிருக்காரு அருள்மொழி. கல்யாணம் பண்ணிக்கலாம்னு வண்டி வண்டியா புருடாவிட்ட அருள்மொழி, அந்த பொண்ணுக்கிட்ட இருந்து ஒரு புது பைக்கும் வாங்கிருக்காரு. அதேமாதிரி, ஒரு ஐபோனும் ஜிபே மூலமா 12 லட்சமும் வாங்கிருக்காரு.இத்தனையையும் வாங்கிட்டு செல்போனை அருள்மொழி ஸ்விட்ச் ஆப் பண்ணினதும் உஷாரான அந்த பொண்ணு பைக்கோட நம்பரை வச்சி விவரமா ஓஎல்எக்ஸ்ல செக் பண்ணிருக்காங்க.அப்போ அந்த பைக்கை தொண்டியை சேர்ந்த ஒருத்தருக்கு அருள்மொழி வித்தது தெரிஞ்சிருக்குது. அந்த வண்டியை கைப்பற்றுன போலீசார் அருள்மொழிக்கிட்ட இருந்து ஐபோனையும் மீட்ருக்காங்க.எத்தனை பெண்களை அருள்மொழி ஏமாத்திருக்காரு? அவரால ஏமாந்த பொண்ணுங்களுக்கு எந்த ஊருனு விசாரணையில இறங்கிருக்க போலீசார் ஏமாந்த பெண்கள் மயிலம் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து புகார் குடுக்கலாம், ரகசியம் பாதுகாக்கப்படும்னும் சொல்லிருக்காங்க...