தொடர் கனமழை காரணமாக சேலம் மாவட்டம் வீரகனூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் சாகுபடி செய்யப்பட்ட பருத்தி செடிகள் அழுகியதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். இதனால் பல லட்சம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த விவசாயிகள், ஏக்கர் ஒன்றுக்கு 10 ஆயிரம் ரூபாய் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.