திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில், இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் மீது காரை மோதி கீழே தள்ளி தாக்குதல் நடத்திய 2 மர்ம நபர்கள், அவரிடம் இருந்த 4 லட்சம் ரூபாய் பணப்பையை பறித்துக்கொண்டு தப்பியோடினர். இஷ்ரத் டிரேடர்ஸ் என்ற ஏஜென்சியில் பணி செய்து வரும் முஹம்மத் ஷஹேப் என்பவர், வழக்கம் போல் இரவு ஏஜென்சி மூடிவிட்டு கலெக்சன் பணம் 4 லட்சத்தை எடுத்துச் சென்றபோது, இந்த வழிப்பறி சம்பவம் அரங்கேறியுள்ளது.