news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மனைவி, பிள்ளைகளை பார்க்க, கத்திய சபரிவர்மன், கடுப்பான வார்டன்கள்
tv

Also Watch

மனைவி, பிள்ளைகளை பார்க்க, கத்திய சபரிவர்மன், கடுப்பான வார்டன்கள்

லுங்கியால் கட்டி வைத்து கோபம் தீர தாக்குதல்

8

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தனது மனைவி, பிள்ளைகளை பார்க்க வேண்டும் என கத்திய சபரிவர்மனின் சத்தம் கேட்டு ஆத்திரமடைந்த சிறை வார்டன்களும், விசாரணை கைதிகளும் லுங்கியால் கட்டி வைத்து அடித்துக் கொ* செய்துள்ளது சிபிசிஐடி போலீசாரின் மூன்றாம் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. முதலில் லுங்கியை சபரிவர்மன் அவிழ்த்து விட்டதும், விடாமல் மீண்டும் கை, கால்களை லுங்கியால் இறுக்கமாக கட்டி இரக்கமற்ற முறையில் நடந்த கொண்டது தெரிய வந்துள்ளது .

சிபிசிஐடி விசாரணை
சபரிவர்மன் வழக்கில் சிபிசிஐடி போலீசாரின் 3ஆம் கட்ட விசாரணையில் வெளியாகி உள்ள தகவல் அவரது மனைவி, பிள்ளைகளுக்கு மேலும் பெருத்த வலியை கொடுக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

Related Link
இரவில் சுற்றும் டிரவுசர் கொள்ளையர், குரைத்தபடியே விரட்டிய தெருநாய்கள்

இரவில் சுற்றும் டிரவுசர் கொள்ளையர், குரைத்தபடியே விரட்டிய தெருநாய்கள்

கன்னியாகுமரி மாவட்டம், ஈத்தங்காடு பகுதியை சேர்ந்தவர் சபரிவர்மன். இவர், தான் நடத்தி வந்த பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வைத்திருந்ததாக கூறி, கடந்த ஜூலை 9ஆம் தேதி தென்தாமரைக்குளம் போலீசார் கைது செய்து நாகர்கோவிலில் சிறையில் அடைத்தனர்.

சபரிவர்மன் மரணம், 11 பேர் கைது
விசாரணை கைதியாக இருந்த சபரிவர்மன், ஜூலை 13ஆம் தேதி சிறையிலேயே அடித்துக் கொ* செய்யப்பட்டார். 3 சிறை வார்டன்கள் மற்றும் 8 விசாரணை கைதிகள் இணைந்து சபரிவர்மனின் கை, கால்களை கட்டிப்போட்டு கொடூரமான முறையில் அடித்துக் கொ* செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, நாகர்கோவில் சிறை வார்டன் ஜெகன், தலைமை வார்டன் சுரேஷ், சிறைக் காவலர் சிவகுமார் மற்றும் விசாரணை கைதிகளான விஷ்ணு, சாரதி, ஜெகன், சரத், பெருமாள், சேதுராம், அஜித், அரவிந்த் என 11 பேரை கைது செய்தனர். மேலும், சிறை வார்டன்கள் மற்றும் காவலர் ஆகிய 3 பேரும் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டனர்.

மனைவி, பிள்ளைகளை பார்க்க வேண்டும்...
இந்த வழக்கு, சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டு பல்வேறுகட்ட விசாரணைகள் நடைபெற்றன. அதேபோல், சென்னையில் இருந்து வந்த சிபிசிஐடி எஸ்பி ஷாஜிதாவும் விசாரணை மேற்கொண்டார். அந்த வகையில் 3ஆம் கட்ட விசாரணையில் அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

தனது மனைவி மற்றும் பிள்ளைகளை பார்க்க வேண்டும் என சபரிவர்மன் கத்த, அந்த சத்தம் கேட்டு கடுப்பான சிறை வார்டன்கள் ஜெகன், சுரேஷ் மற்றும் சிறை காவலர் சிவகுமார் ஆகிய 3 பேரும் சேர்ந்து முதலில் தாக்கி உள்ளனர். வலி தாங்க முடியாமல் அலறிய சபரிவர்மன், தனது மனைவியையும் பிள்ளைகளையும் பார்க்க வேண்டும் என சொல்வதை மட்டும் நிறுத்தவே இல்லை என தெரிகிறது.

கொ*வெறி தாக்குதலில்...
அதன்பிறகு, வார்டன்களின் உத்தரவின்பேரில் விசாரணை கைதிகள் 8 பேரும் சேர்ந்து சபரிவர்மனை லுங்கியால் கட்டி வைத்து கொடூரமாக தாக்கி உள்ளதாக சிபிசிஐடி போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதிலும், முதலில் லுங்கியால் கட்டியபோது அதனை சபரிவர்மன் அவிழ்த்துள்ளார். அதனால், மேலும் ஆத்திரமடைந்த விசாரணை கைதிகள் அவிழ்க்க முடியாதபடி மீண்டும் கை, கால்களையும் இறுக்கமாக கட்டி வைத்து மொத்த கோபத்தையும் காட்டி கொ*வெறி தாக்குதலில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது. சிறை வார்டன்கள் மற்றும் காவலர், 3 கைதிகளை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரணை செய்ய சிபிசிஐடி போலீசார் நடவடிக்கை எடுத்து வருவதாக காவல்துறை வட்டாரங்கள் தரப்பில் கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சென்னை மாநகராட்சியில் சொத்துவரி உயர்த்தப்பட்டதா?

3
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved