தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே பழமைவாய்ந்த புனித தூய ஆவியானவர் ஆலயத்தில் சப்பர பவனி சிறப்பாக நடைபெற்றது. அனுமந்தப்பட்டி ஆலயத்தில் 147 ஆவது சப்பரப்பவனி விழா கடந்த வாரம் தொடங்கியது. இதில் முக்கிய நிகழ்வான கூட்டுத் திருப்பலியும், பின்னர் புனித சவேரியார் மற்றும் மாதா சொரூபங்கள் சப்பரப் பல்லக்கில் வைத்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன.