காணும் பொங்கல் யொட்டி சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் வீதியுலா திருத்தணியில் விழாக்கோலம். தைப்பொங்கல் விழா யொட்டி ஆண்டுதோறும் நடக்கும் காணும் பொங்கல் திருவிழாவையொட்டி, திருத்தணி முருகன் கோயிலில் இருந்து உற்சவர் முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் நகர வீதியுலா நடைபெற்று பக்தர்களுக்கு அருள் பாலிப்பது வழக்கம். அதன்படி இன்று முருகன் கோயில் சீர்பாத தாங்கிகள் சார்பில் இன்று காலை வள்ளி தெய்வானை சமேத உற்சவர் முருகப்பெருமானுக்கு பாதாம், முந்திரி, ஏலக்காய், லவங்கம், குருவி வேர் மயில் மற்றும் சிறப்பு மலர் அலங்காரத்தில் மலைக் கோயிலில் இருந்து மேள தாளங்கள் முழங்க திருப்படிகள் வழியாக சீர்பாத தாங்கிகள் சுமந்து வரப்பட்டு சன்னதி தெயருவில் மாட்டு வண்டி மூலம் நகர வீதியுலா நடைபெற்றது . பேருந்து நிலையம்,ம.பொ.சாலை, நரசிம்மசாமி கோயிலில் தெரு,பெரிய தெரு, உள்பட நகர முக்கிய வீதிகளில் உலா நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.மாலை சண்முக தீர்த்தக் குளம் மண்டபத்தில் உற்சவருக்கு சுகந்த திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், நடைபெற்று அலங்காரம் நடைபெற்று மகா தீபாராதனை நடைபெறும்.. முருகப்பெருமான் நகர வீதியுலா யொட்டி நகரம் முழுவதும் விழா கோலாகலமாக காணப்பட்டது.இதையும் படியுங்கள் : பவானி அம்மன் கோயிலில் குவிந்த பக்தர்கள்