பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் இயங்கி வரும் சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள் தொடர்ந்து 15 ஆவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊதிய உயர்வு, 8 மணி நேர வேலை, தொழிற்சங்க அங்கீகாரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாம்சங் ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனிடையே அடையாள அட்டை முடக்கப்படும், தீபாவளி போனஸ் பிடித்தம் செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்து போராட்டத்தை கைவிடக்கூறி சாம்சங் நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியது.பேச்சுவார்த்தைக்கு கூட சாம்சங் நிர்வாகம் வரவில்லை என பதில் நோட்டீஸ் அனுப்பிய ஊழியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.