தூத்துக்குடியில் உள்ள பழமை வாய்ந்த பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் கோயிலில் நடைபெற்ற திருக்கல்யாண வைபத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். இதனையொட்டி பாகம்பிரியாள் மற்றும் சங்கர ராமேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி காட்சியளித்தனர்.