செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஏரி தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட மாணவன், 4 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்கப்பட்டான். கருங்குழி அடுத்த மலைப்பாளையம் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவன் புவனேஷ், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மதுராந்தகம் ஏரியில் இருந்து கிளியாற்றில் வெளியேற்றப்படும் உபரிநீரில் குளித்தபோது, தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டான். அவனது உடலை 4 நாட்களுக்கு பிறகு, தீயணைப்பு வீரர்கள் சடலமாக மீட்டுள்ளனர். இதனிடையே, மாணவனின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கக்கோரி, பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு, உறவினர்கள் மற்றும் கிராமத்தினர் போராட்டம் நடத்தினர்.