எல்.பி.ஜி. டேங்கர் லாரி வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்க போவதில்லை என தென்மண்டல எஸ்.சி.எஸ்.டி. LPG டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக நாமக்கல்லில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அதன் தலைவர் அகிலன், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தங்கள் சங்கம் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவில்லை என்றும், தற்போதுவரை எல்லா பங்குகளிலும் லோடிங், அன்லோடிங் எந்த வித தடைகள் இல்லாமல் நடைபெறுகிறது என்றார்.