ஈரோடு கிழக்கில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்ட மேடை அமைக்க விடாமல் தடுப்பதாக கூறி, காவல்துறையை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் சாலை மறியல் போரட்டத்தில் ஈடுபட்டனர். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரித்து முனிசிபல் சத்திரம் பகுதியில் சீமான் பிரச்சாரம் செய்வதற்காக டாட்டா ஏஸ் வாகனத்தில் மேடை அமைக்க போலீஸார் அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது.