செங்கல்பட்டு மாவட்டம் சேலையூர் தபால் நிலையத்திற்கு பைக்கில் வந்த திருடர்கள் சுற்றுச்சுவரை தாண்டி குதித்து பொருட்களை திருடி கொண்டு தப்பி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கடந்தவாரம் தபால் நிலையம்,வீடுகள், கடைகள் என ஒரே இரவில் நடந்த தொடர் கொள்ளையால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்தனர். முன்னதாக திருப்போரூர் மற்றும் மாடம்பாக்கம் பகுதியில் இருசக்கர வாகனங்கள் மற்றும் காரை திருடிய கொள்ளை கும்பல், பின்னர் நகை மற்றும் பணத்தை பிரித்து கொண்டு விடுதியில் உல்லாசமாக இருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக மதுரவாயல் ஆலப்பாக்கத்தை சேர்ந்த சூர்யா மற்றும் கண்ணகி நகர், தாளம்பூர் சேர்ந்த 5 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.