திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் போது, வெள்ளி மாலை ஒன்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளதை பார்த்து ஊழியர்கள் ஆச்சரியம் அடைந்தனர். கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணப்பட்ட போது, 54 கிராம் எடையுள்ள சரஸ்வதி, லட்சுமி, விநாயகர் படங்கள் பொறிக்கப்பட்ட வெள்ளி மாலை கிடைத்துள்ளது.