கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த சோலையார் அணைப்பகுதியில் நீர் பிடிப்பு குறைவாக இருப்பதால் வரும் காலங்களில் குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாய நிலையில் உள்ளது. இந்நிலையில் சோலையார் அணை சுமார் 45 அடி தண்ணீர் பிடிப்பு உள்ளது.தற்போது வால்பாறை பகுதியில் வறட்சி அதிக அளவில் காணப்படுவதால் நாளுக்கு நாள் அணையின் நீர்மட்டம் குறைந்து கொண்டே உள்ளது. வால்பாறை பகுதியில் இருந்து பரம்பிக்குளம் ஆழியார் திருமூர்த்தி மலைப் பகுதிகளுக்கு இந்த தண்ணீர் தான் ஆதாரமாக விளங்குகிறது. இந்நிலையில் ஆழியார் அணையில் இருந்து ஆனைமலை பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு தண்ணீர் திறந்து விடுவதும் இந்த அணையின் தண்ணீர் தான் தற்போது குடிதண்ணீர் ஆதாரமாக உடுமலைப்பேட்டை பல்லடம் திருப்பூர் ஈரோடு வரை சோலையார் அணையின் தண்ணீர் பயன்பாட்டுக்கு உள்ளது. இந்நிலையில் தற்போது வறட்சி அதிகமாக இருப்பதால் நீர்மட்டம் குறைகிறது இதனால் ஷேக்கல் முடி. முருகாளி கல்யாணபந்தல். சோலையார் நகர் சேடல் டேம் உருளிக்கல். உள்ளிட்ட சுமார் 5000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்தக் குடிதண்ணீரை நம்பியே வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. Related Link அவசர தேவை என பணம் வாங்கிக் கொண்டு மோசடி