திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள மகப்பேறு சிகிச்சை பிரிவு முன்பு கழிவு நீர் வெளியேறி வருவதால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு முன்பு அமைக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கழிவுநீர் வெளியேறுவதை சரி செய்ய மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.