நாமக்கல் மாவட்டம் அலமேடு அரசு பள்ளியில் மாணவிகளுக்கு தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பாலியல் தொந்தரவு அளித்ததாக எழுந்த புகாரில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மதிவேந்தன் மற்றும் மாவட்ட ஆட்சியர் உமா உறுதி அளித்துள்ளனர். நலத் திட்ட விழாவில் பங்கேற்க அப்பள்ளி வழியாக சென்ற அமைச்சர் மதிவேந்தன் மற்றும் ஆட்சியர் உமாவின் காரை மறித்து பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர்கள் முறையிட்ட நிலையில், நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.