தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி பகுதியில் சிறுமிக்கு ஓராண்டாக பாலியல் தொந்தரவு கொடுத்த இருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. முனியாண்டி மற்றும் பகவதி இருவரும் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியான நிலையில், இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தேனி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 10 லட்சம் ரூபாய் தமிழக அரசு இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.