தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தென்னவன் அரசு பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அதிமுக நிர்வாகி தீபன் போக்சோவில் கைது செய்யப்பட்டார். பட்டுக்கோட்டை அருகே உள்ள பண்ணவயல் கிராமத்தைச் சேர்ந்த தீபன் அதிமுகவின் தஞ்சை தெற்கு மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி இணைச் செயலாளராக நேற்றைய தினம் அதிமுக தலைமையால் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தீபன் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரில் போலீசார் தீபனை கைது செய்துள்ளனர்.