ஈரோடு மாவட்டம் பவானியில் உள்ள சக்தி விநாயகர் மற்றும் ஐயப்பன் கோயிலில், ஐயப்ப சாமியின் வீதி உலா வெகு விமரிசையாக நடைபெற்றது. ஸ்ரீதர்ம சாஸ்தா ஐயப்ப பக்தர்கள் குழு மற்றும் அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் செண்டை மேளம் இசைக்க அம்மன் உள்ளிட்ட வேடங்களை பக்தர்கள் அணிந்து நடனமாடியபடி சாமியை ஊர்வலமாக எடுத்து சென்றனர். இதில், ஏராளமான பெண்கள் கையில் அகல்விளக்கு ஏந்தி சென்று சாமி தரிசனம் செய்தனர்.