திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சுமார் 300க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா தளங்களில் கடைகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது. கொடைக்கானலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் வருவதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தடுக்க முக்கிய இடங்களுக்கான வழித்தடங்களை மாற்றி மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. இந்த அறிவிப்பு காரணமாக வியாபாரம் பாதிக்கப்பட்டு தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி கடைகளை அடைத்து கருப்பு கொடி கட்டி வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.