சென்னை ஓஎம்ஆர் சாலையில் அதிவேகமாக சென்ற தனியார் மருத்துவ கல்லூரி பேருந்து, சாலையை கடக்க முயன்ற நபர்கள் மீது மோதியதன் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. காரப்பாக்கம் அருகே சாலையை கடக்க முயன்ற ஐ.டி பெண் ஊழியர் உள்ளிட்ட ஐந்து பேர் மீது, ஸ்ரீசத்யா சாய் மருத்துவ கல்லூரி பேருந்து மோதியது. இந்த விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.