சென்னையை அடுத்த கிளாம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் ராம்தாஸ் சாதி பெயரை சொல்லி இழிவுப்படுத்துவதாக உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். கிளாம்பாக்கம் காவல்நிலையத்திற்கு டாடா ஏஸ் வாகனத்துடன் வந்து மேஜை நாற்காலி ஆகியவற்றை எடுத்து சென்ற உதவி ஆய்வாளர் ராஜேந்திரன், வெளியே அமர்ந்து மக்களுக்கு பணி செய்ய உள்ளதாக தெரிவித்தார்.