திருவள்ளூர் மாவட்டம் மாதர்பாக்கம் பகுதியைச் சேர்ந்த இருளர் இன மக்கள், தங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். ஒரே வீட்டில் 3 குடும்பங்கள் வசித்து வருவதால், கடும் இன்னலுக்கு உள்ளாகி வருவதாக வேதனைத் தெரிவித்த இருளர் இனமக்கள், கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை எனத் தெரிவித்தனர்.