புதுச்சேரி மதுபான கடைகள் மற்றும் பார்களில் ஒரே நுழைவாயில் மட்டுமே இருக்க வேண்டுமென கலால் துறை கறாராக உத்தரவிட்டுள்ளது. மது கடைகள் மற்றும் பார்களில் பல நுழைவு வாயில்கள் இருக்க கூடாது என எச்சரித்துள்ள கலால் துறை, மதுபானம் மற்றும் பார்களில் முன் அனுமதியின்றி மாற்றங்கள் செய்ய கூடாது எனவும் தெரிவித்துள்ளது. இதனையும் மீறி அனுமதியின்றி மாற்றம் செய்தால், உரிமத்தை ரத்து செய்வது அல்லது இடை நிறுத்தல் உள்ளிட்ட கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.