தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அடுத்த புரசக்குடியை சேர்ந்த மீனா என்பவர் மலேசியா நாட்டிற்கு வேலைக்கு சென்ற தனது சகோதரனை மீட்டுத்தர கோரி ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். செல்வம் என்பவர் கடந்த 2016 ஆம் ஆண்டு மலேசியா நாட்டிற்கு வேலைக்கு சென்ற நிலையில் பணம் கொடுத்தால் மட்டுமே செல்வத்தை நாட்டிற்கு திருப்பி அனுப்புவோம் என ஒரு மர்ம கும்பல் போன் செய்து மிரட்டுவதாக தெரிவித்த மீனா 50 ஆயிரம் ரூபாய் அனுப்பிய பிறகும் செல்வத்தை ஊருக்கு அனுப்பாமல் மேலும் பணம் கேட்டு அடிக்கடி போன் செய்வதாக கூறினார்.