பேசும் சாமி சிலை மற்றும் மரகத கற்களை வீட்டில் வைத்தால் செல்வம் பெருகும் என கூறி, தேனியில் சதுரங்க வேட்டை திரைப்பட பாணியில் ஏமாற்றிய ஆறு பேர் கொண்ட கும்பலை போலீஸார் கைது செய்தனர். சுக்குவாடன்பட்டியை சேர்ந்த ஆண்டவர் என்பவர், மோசடி கும்பலிடம் பச்சை நிற கற்களை வாங்கி ஏமாந்ததாக கூறப்படுகிறது .