திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக பகல் வேளைகளில் கடும் வெயிலும் மாலை வேளையில் கடும் குளிருமாக காணப்படுகிறது. குறிப்பாக கடந்த இரண்டு நாட்களாக கொடைக்கானல் மலைப்பகுதிகளில் கடும் உறை பனி நிலவியது. இந்த நிலையில் நேற்று நண்பகல் வேளையில் திடீரென அடர்ந்த பனி மூட்டத்துடன் கூடிய லேசான சாரல் மழை தொடர்ந்து பெய்தது. அதனை தொடர்ந்து இன்று காலை கொடைக்கானல் பாம்பகுதிகளில் உள்ள புல்வெளிகள், செடி,கொடிகளில் முத்து முத்தாக நீர் பனி துளிகள் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் இருந்தது. குறிப்பாக சீனிவாசபுரம், பாத்திமா குருஷ்ரடி, செட்டியார் பூங்கா ஆகிய பகுதிகளில் நீர் பனி அதிக அளவில் காணப்பட்டது. மேலும் பழனி மலை பள்ளத்தாக்கு பகுதியில் கடல் அலையைபோல மேக மூட்டங்கள் படர்ந்து ரம்யமாக காட்சியளித்து. இதனை கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த பயணிகள் ஆர்வதுடன் கண்டு ரசித்து செல்ஃபி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர். Related Link சீர்காழி நகராட்சியில் பழுதான குப்பை வாகனங்கள்