ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் முத்தாலம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவில், இஸ்லாமியர்கள் பூத்தட்டுகளை ஏந்தி வழிபட்டது, மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக அமைந்தது. ஸ்ரீமுத்தால பரமேஸ்வரி அம்மன் கோயிலின் 69 ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் மேளதாளங்கள் முழங்க தட்டுகளில் பல்வேறு வகையான பூக்களை ஊர்வலமாக எடுத்து சென்று அம்மனை தரிசித்தனர். இதைப்போல அம்மனுக்கு பூக்களை கொண்டு சென்ற இஸ்லாமிய மக்களுக்கு மாலை அணிவித்தும், பொன்னாடை போர்த்தியும் கோயில் நிர்வாகத்தினர் வரவேற்றனர்.