Also Watch
Read this
By: Fyrose Banu

திருப்பத்தூர் நகர் தில்லை நகர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ராதா கிருஷ்ணா கோயில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.முன்னதாக கோயிலில் யாகசாலை பூஜைகள், வேத மந்திரங்கள் முழங்கியபடி புனித நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பின்னர் ஸ்ரீ கிருஷ்ணர் மற்றும் ஸ்ரீ ராதாதேவிக்கு பால், தயிர், தேன், பன்னீர் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன.

இதனை தொடர்ந்து புனித நீர் கலசங்களில் நிரப்பப்பட்டு, வேத மந்திரங்கள் முழங்க குடமுழுக்கு நடைபெற்றது. அப்போது விஷ்ணு சமாஜ் சமூகத்தை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் தங்களுக்குரிய பாரம்பரிய நடனம் ஆடி மகிழ்ந்தனர்.

இந்த கும்பாபிஷேக திருவிழாவில் முன்னாள் அதிமுக பத்திர பதிவுத்துறை அமைச்சர் கே.சி. வீரமணி கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved