திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே 25 சவரன் தங்கநகையை வீட்டில் வைத்துக்கொண்டே, பைக்கில் சென்ற போது மர்மநபர்கள் நகையை பறித்து சென்றதாக நாடகமாடிய பெண்ணை போலீஸார் கைது செய்தனர். எரவாஞ்சேரியை சேர்ந்த ஹமீதாபரோஸ், வங்கி லாக்கரில் வைப்பதற்காக தாம் எடுத்து சென்ற 25 சவரன் தங்க நகையை, மர்மநபர்கள் வழிமறித்து பறித்து சென்றதாக காவல்நிலையத்தில் புகார் அளித்தார். சந்தேகத்தின் பேரில் அவரிடமே விசாரணை மேற்கொள்ளப்பட்டதில், குடும்பத்தினருக்கு தெரியாமல் உறவினருக்கு நகை அடமானம் வைத்து பணம் கொடுத்து உதவ, வழிப்பறி நாடகமாடியது தெரியவந்துள்ளது. Related Link பத்ரகாளியம்மன் கோவில் தீமிதி திருவிழா - காவடி ஊர்வலம்