நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில், தடை செய்யப்பட்ட திமிங்கல எச்சமான ஆம்பர் கிரீஸை பதுக்கி விற்பனையில் ஈடுபட்ட 5 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட வீரமணி, கார்த்திகேயன், ஃபெலிக்ஸ் பவுல்ராஜ், தமிழரசன், கண்ணன் ஆகியோரிடம் இருந்து 9 கிலோ ஆம்பர் கிரீஸ் பறிமுதல் செய்யப்பட்டது.