புதுச்சேரி ஏனாம் பகுதியில் வயிற்று வலிக்கு சிகிச்சைக்கு சென்ற நபர் உயிரிழந்த நிலையில், மருத்துவமனையை கண்டித்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அய்யன்னா நகரை சேர்ந்த ஸ்ரீனிவாஸ் என்பவருக்கு வயிற்று வலி ஏற்பட்ட நிலையில், ஏனாமில் உள்ள அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். உரிய சிகிச்சை அளிக்காமல் காக்கிநாடா மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. ஆம்புலன்ஸில் செவிலியர்கள், ஊழியர்கள் யாரும் இல்லாத நிலையில், வழியிலேயே உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது.