சம்பள பேச்சுவார்த்தை தொடங்காததை கண்டித்து வரும் 20-ம் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. சென்னை கோபாலபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் கமலக்கண்ணன், கோரிக்கைகளை அரசு ஏற்கும் வரை வேலைநிறுத்த போராட்டத்தை கைவிடப் போவதில்லை என தெரிவித்தார்.