திருவாரூர் அருகே உள்ள கிடாரம் கொண்டான் பகுதியில் திருவிக அரசு கலை கல்லூரி இயங்கி வருகிறது.இந்த கல்லூரி திருவாரூர் தியாகராஜ கோவில் வளாகத்தில் 1971 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு கடந்த 55 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது.இந்த கல்லூரிக்கு கடந்த 1983 ஆம் ஆண்டு திருவாரூர் வி. கல்யாண சுந்தரம் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருவிக அரசு கலைக் கல்லூரி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.இந்த கல்லூரியில் திருவாரூர் நாகப்பட்டினம் மாவட்டங்களைச் சேர்ந்த 2500 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.இந்த கல்லூரியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றுக்காக தமிழ் துறையில் பயின்று வரும் மாணவிகள் கல்லூரியில் ஒத்திகை பார்க்கும் நிகழ்வில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அதில் ஐந்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் வகுப்பறையில் மது அருந்தி உள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.இந்த வீடியோவில் மாணவிகள் பீர் பாட்டிலை கையில் வைத்துக்கொண்டு ஒருவர் மாற்றி ஒருவர் குடிப்பதும் அவர்களுக்குள் குடித்துவிட்டு மயங்கி விடக்கூடாது ஒழுங்காக ஆட வேண்டும் என்று பேசிக்கொள்வதுமாக ஒரு நிமிடத்திற்கு காட்சி பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.தற்போது இந்த கல்லூரியின் தமிழ் துறை தலைவராக நடராஜன் என்பவரும் முதல்வராக சுஜாரிதா மேக்டலின் என்பவரும் பணியாற்றி வருகின்றனர் இது குறித்து கல்லுரி முதல்வருக்கு தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு விளக்கம் கேட்க முற்பட்டபோது அவர் தொலைபேசி அழைப்பை ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. Related Link குமாரபாளையத்தில் ஜல்லிக்கட்டு ; சீறிப்பாய்ந்த காளைகள்