ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் அரசு ஒப்பந்த பணிக்கு பில் விடுவிப்பதற்காக 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற துணை வட்டார வளர்ச்சி அலுவலரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் உத்தரவிட்டார். புளியங்குடி கிராமத்தில் உள்ள அருந்ததியர் குடியிருப்பில் 7.50 லட்சம் ரூபாயில் கட்டி முடிக்கப்பட்ட நாடக மேடைக்கு பில் விடுவிப்பதற்காக ஒப்பந்ததாரரிடம் முதுகுளத்தூர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பால்பாண்டியன் கடந்த 4 ஆம் தேதி 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றார். அப்போது அவரை மாவட்ட ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.