ஃபெஞ்சல் புயல் பாதிப்புக்கு பிறகு போக்குவரத்து சீரான புதுச்சேரி-கடலூர் சாலையில் திடீரென விரிசல் ஏற்பட்ட நிலையில், அதனை புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி நேரில் பார்வையிட்டார். இடையர்பாளையம் பகுதியில் உள்ள பாலம் உடைந்து சாலையில் விரிசல் ஏற்பட்டதால் போக்குவரத்துக்கு போலீசார் தடைவிதித்து, கடலூருக்கு செல்லும் வாகனங்களை வேறு வழியில் திருப்பி விட்டனர்.