தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதிகளில் திடீரென பெய்த கனமழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். பகலில் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், திடீரென கொட்டித்தீர்த்த கனமழையால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதில் மாணவி ஒருவர் மழையில் நனைந்தபடி பள்ளி சீருடையை துவைத்து மகிழ்ந்தார்.