விவசாயிகளின் சிரமம் தெரியாமல், கண் மற்றும் காது கேட்காதது போல இன்சூரன்ஸ் நிறுவனங்கள் செயல்படுவதாக காங்கிரஸ் எம்.பி. சுதா குற்றம் சாட்டினார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்டும் என்றார்.