திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் உடைந்து சேதமடைந்துள்ள நிலையில், அதனை சீரமைக்காமல் அலட்சியமாக இருந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், குற்ற சம்பவங்கள் நிகழும் முன் அதனை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.