மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே குடிநீர் விநியோகம் கேட்டு போராட்டம் நடத்திய த.வெ.க.வினர் எழுப்பிய கேள்விகளை சமாளிக்க முடியாமல், நெஞ்சுவலி வந்தது போல நடித்த BDO இடத்தையே காலி செய்து எஸ்கேப் ஆன சம்பவம் நகைப்பை ஏற்படுத்தியது.நெஞ்சு வலி என சொல்லி போராட்டக்காரர்களிடம் இருந்து தப்பித்த வட்டார வளர்ச்சி அலுவலர், செய்தியாளர் கேட்கும் போது மயக்கம் வந்து விட்டது என மாற்றி மாற்றி பேசியதிலேயே அவருடையமயக்க நாடகம் அம்பலமாகி விட்டது.வராத நெஞ்சு வலியை வா...வா... என வம்படியாக வர வைத்துக் கொண்ட BDO, அந்த நெஞ்சு வலியிலும் வாயை அடக்க முடியாமல் சண்டைக்கு எகிறியதை என்னவென்று சொல்லி சிரிப்பது? மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே புங்கனூர் கிராமத்தில் சில ஆண்டுகளாகவே குடிநீர், உப்பு தண்ணீராக மாறி வரும் நிலையில், பல முறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், த.வெ.க. மாவட்ட செயலாளர் தலைமையில் சாலையை மறித்து போராட்டம் நடத்தினர்.வாகனங்களை வழி மறித்து போராட்டம் நடத்திய நிலையில், தகவல் அறிந்து சீர்காழி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் அதாவது BDO சரவணன் சம்பவ இடத்திற்கு வருகை தந்தார்.2 ஆண்டுகளாக உப்பு தண்ணீரை குடிப்பதால் குழந்தைகளுக்கு தோல் வியாதி வருகிறது என குறிப்பிட்டு, பெண் ஒருவர் தங்கள் குறைகளை பேசிக் கொண்டிருக்க, உப்பு தண்ணீர் குடித்து பார்த்த BDO சரவணன் விரைவிலேயே சரி செய்யப்படும் என பேச்சுவார்த்தை நடத்தினார்.இப்படியே தான் எல்லா அதிகாரிகளும் சொல்கிறார்கள். ஆனால், வேலை நடந்த மாதிரி தெரியவில்லை என கிராம மக்கள் BDO சரவணனை சுத்து போட்டனர். த.வெ.க.வினரும், கிராம மக்களும் BDO சரவணனை சூழ்ந்து கொண்டு கேள்வி எழுப்ப, அங்கிருந்து தப்பிக்க வழி தெரியாமல் யோசித்த அந்த அதிகாரி, நன்றாக பேசிக் கொண்டிருந்த போதே திடீரென நெஞ்சை பிடித்தபடி கீழே சரிந்து விழுந்தார். சரிந்து விழுந்தவருக்கு என்ன ஆனதோ? என அங்கு நின்றவர்கள் சுதாரிப்பதற்குள் மல்லாக்க சாய்ந்திருந்த அந்த அதிகாரியே ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போக சொல்லி கத்தி கூப்பாடு போட்டார். நெஞ்சை பிடித்துக் கொண்டு கீழே விழுந்த அதிகாரி, கொஞ்சம் கூட எந்த படபடப்பு, பதற்றம் இல்லாமல் காணப்படவே, கூடி நின்றவர்களுக்கு உண்மையிலேயே நெஞ்சு வலி வந்தாதா? என சந்தேகம் வர தொடங்கியது. அதிகாரியின் திடீர் ஆக்சனை பார்த்து அவரது ஓட்டுநரே முழித்து போய் விட்டார்.நல்லா இருந்தவருக்கு என்ன ஆனது என எல்லாரும் கேள்வி எழுப்ப, எங்கு நமது நாடகத்தை கண்டு பிடித்து விடுவார்களோ என யோசித்து அந்த நெஞ்சுவலியிலும் அவரே எழுந்து ஜீப்பில் ஏறி அமர்ந்து கொண்டார். ஆனாலும் அங்கு நின்றவர்கள் அதிகாரியை அனுப்பி வைக்கும் முடிவில் இல்லாததால் கேள்வி எழுப்பிக் கொண்டே இருந்தனர்.நீயெல்லாம் ஒரு அதிகாரியா? மக்கள் கேள்வி கேட்டால் நெஞ்சு வலி வருமா? என்றெல்லாம் ஆத்திரத்தில் த.வெ.க.வினர் பொங்கி எழ, அந்த அதிகாரிக்கு சண்டை போடுவதா? நடிப்பதா? என தெரியாமல் குழம்பி போய் விட்டார்.பதிலுக்கு பதில் பேசி சண்டையும் போட முடியாமல், நெஞ்சை பிடித்துக் கொண்டு முழுசாக ஆக்சனும் போட முடியாமல் அவஸ்தைபட்டார் அந்த அதிகாரி.ஆவேசத்தில் அடிக்கடி நெஞ்சில் இருந்து கையை எடுத்த அந்த BDO அதிகாரியின் ஆக்சன் காட்சிகளை பார்த்து எல்லாரும் கைத்தட்டி சிரிக்க, கடுப்பான அந்த அதிகாரி போராட்டக்காரர்களை திட்டிக் கொண்டே இடத்தை காலி செய்து விட்டார்.மனிதாபிமானத்தோடு ஆம்புலன்ஸில் அனுப்பி வைக்கிறோம் என போராட்டக்காரர்கள் கூறியும், என்னைய விட்டால் போதும் சாமி என நினைத்து அதிகாரி ஜூட் விட்டு பறந்து சென்றார்.இதுகுறித்து நியூஸ் தமிழ் செய்தியாளர் செல்லப்பா, அந்த அதிகாரியை அழைத்து நடந்தது என்ன? என்று விளக்கம் கேட்க, போராட்டக்காரர்கள் மத்தியில் தனி ஆளாக சிக்கிக் கொண்டேன் என்றதோடு எல்லாரும் சத்தம் போட்டு பேசிக் கொண்டிருந்ததால் டென்ஷன் ஆகி மயக்கம் வந்து விட்டது என்றார். பின்னர், BP மாத்திரை போட்டதும்தான் நிலைமை சரியானதாக விளக்கம் கொடுத்தார்.போராட்டத்தில் நிற்கும் போது நெஞ்சை பிடித்துக் கொண்டு நெஞ்சு வலி என சரிந்து விழுந்த பிடிஓ, செய்தியாளர் விளக்கத்தில் மயக்கம் வந்து விட்டது, BP எகிறி விட்டது என சமாளித்து இருக்கிறார். த.வெ.க.வினர் எழுப்பிய கேள்வியை சமாளிக்க முடியாமல் போராட்டத்தை பேச்சுவார்த்தை மூலம் கையாள கூட தெரியாமல் அந்த இடத்தில் இருந்தே எஸ்கேப் ஆக அதிகாரி போட்ட ஆக்சனுக்கு அடுத்த ஆண்டு ஆஸ்கர் அவார்டு வெயிட்டிங்...